தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மூன்று ரயில்களின் நேரம் வரும் 7 முதல் மாற்றம்

மூன்று ரயில்களின் நேரம் வரும் 7 முதல் மாற்றம்

மூன்று ரயில்களின் நேரம் வரும் 7 முதல் மாற்றம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் கோட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும், மூன்று ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு, வரும், 7 முதல் அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் – பாலக்காடு விரைவு ரயில், நள்ளிரவு, 12:58 மணிக்கு பதிலாக, 12:53 மணிக்கு வரும். அதாவது, 5 நிமிடத்துக்கு முன்னதாக வந்து சேரும்.

அதேபோல், சென்னை சென்ட்ரல் – கோவை சேரன் விரைவு ரயில், 10 நிமிடங்களுக்கு முன்னதாக, அதாவது, நள்ளிரவு, 1:13 மணிக்கு பதிலாக, 1:03 மணிக்கு வந்துவிடும்.

நியூ ஜல்பைகுரி – நாகர்கோவில் அம்ரித் பாரத் வார விரைவு ரயில், காலை, 9:58 மணிக்கு பதிலாக, 15 நிமிடங்களுக்கு முன்னதாக, 9:43 மணிக்கு வந்துவிடும். இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us