உள்ளடக்கத்திற்கு செல்ல

இன்று 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
இன்று 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
ADDED : நவ 27, 2026 05:43 AM

அ நிறம் | அளவு
சென்னை: 'சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 19 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை: குமரிக்கடல் முதல் தமிழகம், கேரளா வழியாக, தெற்கு கர்நாடகா வரை, வளி மண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் இன்று இடி, மின்னல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
