மேலும் ஒருவரை கொன்றது புலி; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உத்தரவு
மேலும் ஒருவரை கொன்றது புலி; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உத்தரவு
UPDATED : ஆக 21, 2026 11:10 PM
ADDED : ஆக 21, 2026 04:45 PM

கூடலூர்: நீலகிரியில் புலி தாக்கி மற்றொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி லாரஸ்டன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தனியார் காபி தோட்டத்தில் குடிநீர் குழாயை சீரமைக்க சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தார், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, காபி தோட்டத்தில் கடித்து குதறப்பட்ட நிலையில், பாலகிருஷ்ணன் சடலம் கிடந்தது. புலியின் கால்தடமும் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், இதே பகுதி, அருகே ரவிசந்திரன், 56 , என்பவர் புலி தாக்கி உயிரிழந்தார். மக்கள் அவர் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புலியை கூண்டு வைத்து பிடிக்க அனுமதி கிடைத்துள்ளதாக வனதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
