தமிழகத்தில் திமுக இருக்கும் வரை மோடி மஸ்தான் வேலை எடுபடாது :ஸ்டாலின்
தமிழகத்தில் திமுக இருக்கும் வரை மோடி மஸ்தான் வேலை எடுபடாது :ஸ்டாலின்
UPDATED : மார் 30, 2024 10:18 PM
ADDED : மார் 30, 2024 08:17 PM

சேலம் : தமிழகத்தில் திமுக இருக்கும் வரை மோடி மஸ்தான் வேலை எடுபடாது. போலி்யான பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட மோடி மாடல் தோல்வி அடைந்துள்ளது. என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
பார்லிமென்ட் லோக்சபா தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் சேலம் செல்வகணபதி, மற்றும் கள்ளக்குறிச்சி மலையரசன் ஆகியோரை ஆதரித்து சேலத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசியதாவது: பிரதமர் மோடியால் மொத்த நாடே தூக்கத்தைதொலைத்து விட்டு நிம்மதியின்றி தவிக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் வரையில் தென் மாநிலங்களில் பா.ஜ.வெற்றி பெற முடியாது என்ற நிலை இருந்தது. தற்போது வடமாநிலங்களிலும் பா.ஜ.,க ஆட்சிக்கு வர முடியாது என உளவுத்துறை பிரதமருக்கு ரிப்போர்ட் அளித்துள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வால் சாதாரண மக்கள், பெண்கள் தூக்கத்தை தொலைத்து விட்டனர். தேர்தல் நேரத்தில் பிரதமர் இடி, சி,பி.ஐ., ஐ.டி போன்ற துறைகளை பயன்படுத்தி வருகிறார்.
பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்;
சினிமா காமெடி போல, பா.ஜ.,வுக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக். தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் கிடைக்காமல் கவர்னர், சிட்டிங் எம்.எல்.ஏ.,வை நிறுத்துகின்றனர். பா.ஜ,.வுக்கு இருக்கும் பயமெல்லாம், நோட்டாவை விட கீழே போகாமல் டிபாசிட் ஆவது வாங்க வேண்டுமே என்பது தான்.அதனால் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை புகழ்ந்து மோடி பேசுகிறார்.உயிருடன் இருந்த போது ஜெயலலிதாவை பாராட்டாத பிரதமர் இப்போது எப்படி பாராட்டுகிறார்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஜெயலலிதாவும், சோனியாவும் தான் காரணம் என கூறி இருந்தார்.பெண்கள் சக்தி பற்றி பேசும் பிரதமர் பெண்கள் பாதுகாப்பு நிதியான நிர்பயா நிதியை ஒதுக்கவில்லை.
தமிழ்நாடு ஏற்கனவே புண்ணிய பூமியாகத்தான் இருந்து வருகிறது. சகோதரத்துவத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது இந்த புண்ணிய பூமிக்கு ஏன் பிரதமர் வரவில்லை.வெள்ள பாதிப்பு, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை பிரதமர் வழங்காதது ஏன்? எப்படியாவாதுஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இந்திய ஜனநாயக அமைப்பை சீரழித்து வருகிறார். இந்தியாவிலேயே ஊழல் நடைபெறும் ஆட்சி ஜெ.,ஆட்சி என்று கூறியவர் ஓட்டுக்காக இன்று அவரை புகழ்கிறார்.
தமிழ்பேச முடியவில்லை என்று கூறியவர் அகில இந்திய வானொலியை ஆகாஷவாணி என்று மாற்றி உள்ளார். கேட்டு கேட்டு புளித்துபோன குடும்பஅரசியல் என்ற பல்லவியை திரும்ப திரும்ப பாடி உள்ளார் பிரதமர். தே.ஜ.,கூட்டணியில் ஏற்கனவே உள்ள பா.ம.க., ஏன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோர வில்லை குடியுரிமை சட்டத்தை ஆதரித்தது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது என்று பிரதமர் கூறும் புதிய அவதூறுக்கு ஆதாரம் உள்ளதா . பா.ஜ.,வில் இணைந்துள்ள சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் 25 பக்கம்கொண்ட பட்டியல் என்னிடம் உள்ளது. நான் சொல்வது தவறு என்றால் என் மீது வழக்கு தொடர தெம்பும் திராணியும் இருக்கிறதா? திமுகவில் இருந்த நபருக்கு போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது அந்த நபர் அடுத்த நொடியிலேயே கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். போதை பொருள் அதிகம் புழங்கும் 10 மாநிலங்களில் 7 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பது பா.ஜ,,தான். போதை பொருள் கடத்தல் வழக்கில் பா.ஜ,வை சேர்ந்த 14 பேர் சிறையில் உள்ளனர். மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருந்த போது பிரதமர் எங்கே போயிருந்தார்?.
தமிழகத்தில் எடுபடாது
தமிழத்தில் திமுக இருக்கும் வரையில் மோடி மஸ்தான் வேலை எடுபடாது பழனிசாமிக்கு வாக்களிக்க உண்மையான அதிமுக தொண்டர்கள்,.,விசுவாசிகள் தயாராக இல்லை, பா.ஜ.வுக்கு எதிராக பழனிசாமி பேசுவதை அவரது எஜமானர் விசுவாசம் தடுக்கிறதா போலி்யான பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட மோடி மாடல் தோல்வி அடைந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 77 லட்சத்து 78 ஆயிரம் பேருக்குவேலைவாய்பபு கிடைத்து உள்ளது. மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசு எப்படி செயல்பட கூடாது என்பதற்கு பா.ஜ.,அரசு உதாரணம். தமிழகத்தில் உண்மையான மக்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் பத்திர ஊழலால் பா.ஜ.,வினரின் தூக்கம் தொலைந்துள்ளது. மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

