அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு எப்படி விசாரணை நடக்கிறது: ஐகோர்ட் கேள்வி
அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு எப்படி விசாரணை நடக்கிறது: ஐகோர்ட் கேள்வி
ADDED : ஆக 16, 2024 06:41 PM

சென்னை: அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு, கொலை, வன்முறைகளை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
தனது நிலம் நில அபகரித்தது தொடர்பாக கார்த்தி என்பவர் அளித்த புகார் குறித்து சி .பி.ஐ.,விசாரிக்க உத்தரவு பிறத்த ஐகோர்ட் சிறப்பு குழுவை அமைத்து நான்கு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு உள்ளது. தொடர்ந்து இதுகுறித்து சென்னை ஐகோர்ட் தெரிவித்து இருப்பதாவது: ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு கொலை, வன்முறைகளை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர். வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க முடியாது என்பதை விசாரணை அமைப்புகள் வெளிப்படுத்தி வருகிறது. நிலம் கார்த்திக் என்பவருக்கு சொந்தம் என்று தெரிந்த பின்னரும் காவல்துறை கண்களை மூடிக் கொண்டு உள்ளது.
ரவுடிகளுடன் போலீசார் கைகோர்த்து கொண்டதால் உண்மையான நில உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்று நிகழ்ந்தால் போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை குலைந்து விடும்.இவ்வாறு ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.

