திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 7ல் குடமுழுக்கு விழா!
திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 7ல் குடமுழுக்கு விழா!
ADDED : ஜூன் 06, 2025 08:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஜூலை 7ம் தேதி காலை 6.15 முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உள்ளதாவது:
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு விழா 2025ம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜூலை 7 முடிய வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டு ஜூலை 7ம் தேதி காலை 06.15 மணிக்கு மேல் 06.50 மணிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.