தண்ணீரில் மிதக்கும் திருநெல்வேலி; தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழை நீடிக்கும்!
தண்ணீரில் மிதக்கும் திருநெல்வேலி; தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழை நீடிக்கும்!
ADDED : டிச 13, 2024 08:45 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் அருகே உள்ள காட்சி மண்டபம் சாலை முழுவதும் மழைநீரில் முழ்கியது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 500 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, காட்சி மண்டபம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகள், கோவில்களுக்குள் மழைநீர் புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த திருநெல்வேலி மேயர் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். திருநெல்வேலி டவுன் அருகே உள்ள காட்சி மண்டபம் சாலை முழுவதும் மழைநீரில் முழ்கியது. திருநெல்வேலி டவுனில் பெய்த கனமழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம், முகமது அலி தெரு, கே.டி.சி., நகர் கீழநத்தம் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்தது. தமிழகத்தில், 27 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாவட்ட விவரம் வருமாறு:
1. அரியலூர்,
2. பெரம்பலூர்,
3.திருச்சி,
4. கரூர்,
5.திண்டுக்கல்,
6.மயிலாடுதுறை,
7. நாகை,
8. தஞ்சாவூர்,
9.திருவாரூர்,
10. தென்காசி,
11.தேனி,
12.விருதுநகர்,
13. புதுக்கோட்டை,
14. ராமநாதபுரம்,
15. சிவகங்கை,
16.கடலூர்,
17. சேலம்,
18.நாமக்கல்,
19. நீலகிரி,
20. கோவை,
21. திருப்பூர்,
22. திருநெல்வேலி,
23.தூத்துக்குடி,
24. சென்னை,
25. திருவள்ளூர்,
26.காஞ்சிபுரம்,
27. செங்கல்பட்டு,

