ADDED : ஜன 02, 2026 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில், மாநிலத்திலேயே திருப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.
தமிழகம் முழுதும், 2025 ஏப்., முதல் நவ., வரை எட்டு மாதத்தில், 3,333 ஆண்கள், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஒப்புதல் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். திருப்பூர் அரசு மருத்துவமனையில், 100 பேர் ஒப்புதல் தெரிவித்ததில், 29 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில், காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடமும், திருப்பூர் இரண்டாம் இடமும் பிடித்துள்ளன. இங்கு 4,633 பெண்கள் விருப்பம் தெரிவித்து, 4,784 பேர் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.

