sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறிய த.வா.க., தலைவர்: தன்னுடன் மாவோயிஸ்டுகள் இருப்பதாக சொல்கிறார்

/

 தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறிய த.வா.க., தலைவர்: தன்னுடன் மாவோயிஸ்டுகள் இருப்பதாக சொல்கிறார்

 தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறிய த.வா.க., தலைவர்: தன்னுடன் மாவோயிஸ்டுகள் இருப்பதாக சொல்கிறார்

 தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறிய த.வா.க., தலைவர்: தன்னுடன் மாவோயிஸ்டுகள் இருப்பதாக சொல்கிறார்

19


UPDATED : மார் 23, 2026 02:35 PM

ADDED : மார் 23, 2026 05:06 AM

Google News

19

UPDATED : மார் 23, 2026 02:35 PM ADDED : மார் 23, 2026 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தமிழக வாழ்வுரிமை கட்சி, தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுகிறது,'' என அக்கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

தமிழக வாழ்வுரிமை கட்சி, தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி விட்டது. எங்கள் கட்சியை பொறுத்தவரை, தமிழ்நாடு விடுதலைப்படை, மாவோயிஸ்ட் இயக்கங்கள், தமிழ்நாடு மீட்சிப்படை என, ஒரு அரசியல் தலைமை குழுவை கொண்ட கட்சியாக உள்ளது. எனவே, நான் தனித்து எந்த முடிவும் எடுக்க முடியாது.

தி.மு.க.,வுக்கு குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையில் ஆதரவு அளித்தேன். அதை நிறைவேற்றுமாறு கேட்டபோது, 'நீங்கள் என்ன எங்களை பார்த்து 'டிமாண்ட்' வைப்பது' என, பெரியண்ணன் மனப்பான்மையில் தி.மு.க., கையாண்டது.

வன்னியருக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடை அமல்படுத்துவதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு கோரியும், அதை செய்யவில்லை. இதற்கு, முதல்வரை இயக்குகிற, உயர் ஜாதி ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் கொண்ட அதிகாரிகளே காரணம்.

பரந்துார் விமான நிலையம் வரும் பகுதியில், தி.மு.க., அமைச்சர் ஒருவர், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி போட்டுள்ளார்.

எந்தெந்த அமைச்சர்கள், எந்தெந்த துறைகளின் செயலர்கள் தவறு செய்தனர் என்ற புள்ளி விபரம் என்னிடம் உள்ளது. இதை, தமிழக மக்களிடம் தெரிவிப்பேன்.

நான் இறுதியாக மூன்று தொகுதிகள் கேட்டேன். வேறு கட்சி அழைக்கும்; அதிக இடங்கள் கொடுக்கும் என்ற நோக்கம் எங்களுக்கு கிடையாது. பா.ஜ., கூட்டணியில் எங்கள் கட்சி இடம் பெறாது.

இனி, நான் முன்வைத்த 10 கோரிக்கைகளை ஏற்பவர்களுடன் சேர்ந்து, தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

துரைமுருகன் 'நக்கல்' பதில்

தி.மு.க., கூட்டணியில் இருந்து த.வா.க., வெளியேறியது குறித்து, அமைச்சரும், தி.மு.க., பொதுச்செயலருமான துரைமுருகனிடம் கேட்ட போது, ''அதை நான் எப்படி பார்ப்பது, இப்படித் தான் பார்ப்பேன்,'' என மேலே பார்த்தபடி, தனக்கே உரிய 'நக்கல்' பாணியில் பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், ''போகும் போது குற்றச்சாட்டுகளை சொல்லாமல், நல்லாட்சி நடக்கிறது; நான் போயிட்டு வருகிறேன் என்றா சொல்வர்? கூட்டணியை விட்டு வெளியே போனால், இந்த ஆட்சி சரியில்லை என்று தான் சொல்வர். அவர் சொல்வது எல்லாம் வழக்கமாக சொல்பவை தான். வேல்முருகனை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சு நடத்துவது, என் 'சப்ஜெக்ட்' கிடையாது; என்னை விட்டு விடுங்கள்,'' என்றார்.








      Dinamalar
      Follow us