தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தே.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறியது த.மா.கா.,

 தே.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறியது த.மா.கா.,

 தே.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறியது த.மா.கா.,

3


ADDED : ஜூன் 15, 2026 07:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 07:50 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விலகுகிறது,” என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

த.மா.கா., மாநில செயற்குழு கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடந்தது.

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என, 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 'தேர்தல் தோல்விக்கு பிறகும், தே.ஜ., கூட்டணியில் தொடரலாமா, வேண்டாமா' என, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

பெரும்பாலானோர், 'தே.ஜ., கூட்டணியில் தொடர வேண்டாம்' என தெரிவித்தனர்.

அதை ஏற்று, தே.ஜ., கூட்டணியில் இருந்து, நட்பு ரீதியாக த.மா.கா., விலக முடிவு செய்யப்பட்டது.

பின், ஜி.கே.வாசன் அளித்த பேட்டி:

த.மா.கா., தொடங்கி 12 ஆண்டுகளாகி விட்டன. கடந்த 2014 முதல் 2026 வரை கூட்டணி

தொடர்ச்சி 6ம் பக்கம்

அரசியலில் பங்கேற்றுள்ளோம். கட்சியின் பொறுப்பாளர்கள், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம், இன்னும் நிறைவேறவில்லை. இதனால் கட்சியை மீண்டும் அடித்தளத்தில் இருந்து, பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில், கூட்டணி அவசியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே, பெரும்பாலானோர் தெரிவித்த கருத்தின்படி, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் வரை, கட்சியின் அடித்தளத்தை விரிவுப்படுத்த உள்ளோம். அதற்காக, தே.ஜ., கூட்டணியில் இருந்து, த.மா.கா., நட்பு ரீதியாக விலக முடிவு செய்துள்ளது.

பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன், எங்களுக்கு எந்தவித சச்சரவோ, மனக்கசப்போ இல்லை. கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்ட கட்சியாக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us