இந்துக்களின் பண்பாட்டு உரிமையை முடக்கப் பார்க்கும் திமுக அரசு வீழ்த்தப்படும்; நயினார் நாகேந்திரன்
இந்துக்களின் பண்பாட்டு உரிமையை முடக்கப் பார்க்கும் திமுக அரசு வீழ்த்தப்படும்; நயினார் நாகேந்திரன்
ADDED : டிச 03, 2025 09:29 PM

சென்னை: இந்துக்களின் பண்பாட்டு உரிமையை முடக்கப்பார்க்கும் திமுக அரசு வீழ்த்தப்படும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றமே உத்தரவிட்டுவிட்டப் பிறகும், அதனை மீறி தீபம் ஏற்றவிடாமல் தடுத்ததோடு, திரண்டிருந்த முருக பக்தர்கள் மீதும் வெறித்தனமாக திமுக அரசு தாக்கியுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இந்துக்களின் மதநம்பிக்கைகளைப் புண்படுத்தி, பண்பாட்டு உரிமையைப் பறிக்கும் கொடூர ஆசையில், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவையே அவமதித்துத் திமுக அரசு செயல்பட்டுள்ளது, இந்து மதத்தின் மீதான அதன் ஆழ்ந்த வெறுப்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
திருப்பரங்குன்றத்தைத் தாரை வார்க்க முயற்சித்ததிலிருந்து, பக்தகோடிகளைக் கொடூரமாகத் தாக்குவது வரை தொடர்ந்து இந்து விரோதப் போக்கைக் கடைபிடித்து வரும் திமுக விரைவில் முருகப்பெருமானின் ஆசியோடு தமிழக மக்களால் துரத்தியடிக்கப்படும்.
திக்கெட்டும் இன்று சுடரொளி வீசும் கார்த்திகை தீபங்கள் போலத் தமிழகமும் முன்னேற்றத்தில் பிரகாசிக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

