2வது நாள் முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்: ஓர் பார்வை
2வது நாள் முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்: ஓர் பார்வை
UPDATED : ஜன 08, 2024 10:12 PM
ADDED : ஜன 08, 2024 06:04 PM

சென்னை: சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டின் 2வது மற்றும் நிறைவு நாள் விழா இன்று (ஜன.,8) நடைபெற்றது. இன்றைய மாநாட்டில் மட்டும் மொத்தம் ரூ.6,64,180 கோடி மதிப்பிலான 5068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்
* விழுப்புரத்தில் ரூ.500 கோடி மதிப்பில் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் காலணி ஆலை அமைகிறது.
* பெரம்பலூரில் ரூ.48 கோடி மதிப்பில் அமையவுள்ள காலணி ஆலை மூலம் 150 பேருக்கு வேலைவாய்ப்பு.
* டாடா நிறுவனம் ரூ.70,800 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம் 3,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
* விருதுநகர், சேலத்தில் ராம்கோ சிமெண்ட் ரூ.999 கோடி முதலீடு.
* தூத்துக்குடியில் ரூ.36,238 கோடியில் புதிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைக்க ஒப்பந்தம். இதனால் 1,511 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* பேனக் இண்டியா நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரோபோடிக் மையத்தை அமைக்க ஒப்பந்தம்.
* ராம்ராஜ் நிறுவனம் ஜவுளித்துறையில் ரூ.1000 கோடி முதலீடு
அதானி
* அதானி பசுமை எரிசக்தித்துறை ரூ.24,500 கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
* அதானி கனெக்ஸ் நிறுவனம் ரூ.13,200 கோடி முதலீடு; ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
* அம்புஜா சிமெண்ட் ரூ.3,500 கோடி முதலீடு; 5000 பேருக்கு வேலைவாய்ப்பு
* மஹேந்திரா நிறுவனத்துடன் ரூ.1,800 கோடியில் 4 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஒப்பந்தம்.
* சென்னையில் 'எல் அண்ட் டி' நிறுவனம் ரூ.3,500 பேருக்கு ஐ.டி பார்க் அமைக்கிறது. இதில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
காவிரி மருத்துவமனை
* பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்க காவிரி மருத்துவமனை ரூ.1,200 கோடியில் ஒப்பந்தம்
* சிபிசிஎல் நிறுவனம் நாகையில் பெட்ரோ கெமிக்கல் திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
* ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ.100 கோடியில் ஒப்பந்தம்; 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு
* சென்னையில் ஆட்டோமொபைல் துறையில் டாபே நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு
* லாங் இன் நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு; 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
* ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ஹாங் நூல் நிறுவனம்.
* சிங்கப்பூர் நிறுவனம் ஹை குளோரி ரூ.2,032 கோடி முதலீடு; 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
மைக்ரோசாப்ட்
* ரூ.2,074 கோடியில் சென்னையில் டேட்டா சென்டரை அமைக்கிறது மைக்ரோ சாப்ட் இந்தியா நிறுவனம்.
* ராயல் என்பீல்டு நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு; 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
* ஆனந்த் குரூப் ரூ.987 கோடி முதலீடு; 1,340 பேருக்கு வேலைவாய்ப்பு
* செயின் கோபின் ரூ.3,400 கோடி முதலீடு
* பெஸ்டோ இந்தியா நிறுவனம் ரூ.520 கோடி முதலீடு
* கேப்லின் பாயிண்ட் நிறுவனம் ரூ.700 கோடி முதலீடு
* லீப் நிறுவனம் ரூ.22,842 கோடி முதலீடு
* சிபிடெக் நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு
* இந்துஜா நிறுவனம் ரூ.1,250 கோடி முதலீடு
* டிகேஜி நிறுவனம் ரூ.1,250 கோடி முதலீடு
முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள்:
உற்பத்தித் துறை ரூ.3.79 லட்சம் கோடி
எரிசக்தித் துறை ரூ.1.35 லட்சம் கோடி
வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை ரூ.62.93 ஆயிரம் கோடி
தகவல் தொழில்நுட்பத் துறை ரூ.22.13 ஆயிரம் கோடி
எம்.எஸ்.எம்.இ., துறை ரூ.63.57 ஆயிரம் கோடி