ADDED : ஜன 11, 2024 03:39 PM

சென்னை: அமைச்சராக உள்ள உதயநிதி விரைவில் துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினின் மகனான உதயநிதி, கடந்த சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வென்று எம்எல்ஏ ஆனார். பின்னர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதனைத்தொடர்ந்து அவருக்கு துணை முதல்வர் பதவியும் அளிக்கப்பட இருப்பதாக அப்போதிருந்தே செய்திகள் வெளியானது. ஆனால், ஆளும் தரப்பினர் மவுனம் காத்தனர்.
இந்த நிலையில் உதயநிதி விரைவில் துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஜனவரி 21ல் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாடு முடிந்ததும், அடுத்த ஓரிரு தினங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும், ஜன.,28ல் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன்பாக துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, ஜன.,24ல் அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என தெரிகிறது.

