ADDED : அக் 22, 2025 04:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கடந்த ஜூலை 12ம் தேதி நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வனக்காவலர் உள்ளிட்ட 4662 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 12 ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் 4 தேர்வு நடந்தது. இத் தேர்வை விண்ணப்பித்த 13.89 லட்சம் பேரில் 11.48 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவை 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறியிருந்தார். இதனால், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. முடிவுகளை Tnpsc. gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.