தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாலையில் மளமளவென சரிந்தது வெள்ளி; ஒரே நாளில் ரூ.85 ஆயிரம் சரிவு

மாலையில் மளமளவென சரிந்தது வெள்ளி; ஒரே நாளில் ரூ.85 ஆயிரம் சரிவு

மாலையில் மளமளவென சரிந்தது வெள்ளி; ஒரே நாளில் ரூ.85 ஆயிரம் சரிவு


ADDED : ஜன 31, 2026 03:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 03:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 31) காலை வெள்ளி கிலோவுக்கு 55 ஆயிரம் ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் 30 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச முதலீட்டாளர்களும், பல நாடுகளும், தங்கம், வெள்ளியில் அதிகளவில் முதலீடுகள் செய்வதால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் தினமும் புதிய உச்சத்தை எட்டி வந்தன. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 29)ஆபரண தங்கம் கிராம் 16,800 ரூபாய்க்கும், சவரன் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 425 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்


நேற்று (ஜனவரி 30) காலை தங்கம் விலை கிராமுக்கு 600 ரூபாய் குறைந்து, 16,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 4,800 ரூபாய் சரிவடைந்து, ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 415 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 350 ரூபாய் சரிவடைந்து, 15,850 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 2,800 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 800 ரூபாய்க்கு ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் சரிவடைந்து, 405 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று வெள்ளி கிலோவுக்கு 20,000 ரூபாயும், தங்கம் சவரனுக்கு 7,600 ரூபாயும் சரிவடைந்தது.

இன்றைய நிலவரம்


இந்நிலையில் இன்று (ஜனவரி 31) காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 7,600 ரூபாய் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 950 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 14,900க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 15,200 ரூபாய் சரிவடைந்தது. அதேபோல, வெள்ளி விலையும் கிராமுக்கு 55 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 350 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 55 ஆயிரம் ரூபாய் சரிந்து ஒரு கிலோ 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

மாலையில் வெள்ளி...


இந்த நிலையில், இன்று மாலை வெள்ளி விலை மட்டும் மீண்டும் சரிந்துள்ளது. காலையில் கிலோவுக்கு 55 ஆயிரம் ரூபாய் சரிந்திருந்த வெள்ளி, மாலையில் மீண்டும் 30 ஆயிரம் ரூபாய் சரிந்துள்ளது. இதன் மூலம், ஒரே நாளில் 85 ஆயிரம் சரிந்து, ஒரு கிலோ 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் வெள்ளி விலை கிராமுக்கு 105 ரூபாயும், கிலோவுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயும் சரிவடைந்துள்ளது. மாலையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us