ADDED : ஏப் 12, 2024 02:28 AM

சென்னை : இன்று மாலை 4:00 மணிக்கு திருநெல்வேலியிலும், 6:30 மணிக்கு கோவையிலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்
பிரசாரம் மேற்கொள்கிறார். கோவை பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் ஒரே மேடையில் பேசுகின்றனர்.
காங்கிரஸ் சார்பில், டில்லியிலிருந்து முதல் தலைவராக, இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள ராகுல் இன்று வருகிறார்.
திருநெல்வேலியில் பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரில் உள்ள பெல் பள்ளிக்கூட மைதானத்தில், இன்று மாலை 4:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்
கூட்டத்தில் ராகுல் பேசுகிறார்.
அதில் பங்கேற்று விட்டு, மாலை 6:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோவை பொதுக் கூட்டத்தில் ராகுலுடன், முதல்வர் ஸ்டாலினும் இணைந்து ஒரே மேடையில்
பேசுகின்றனர். இந்த இரண்டு பொதுக் கூட்டங்களிலும், 50,000 பேர் வரை பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

