ADDED : மார் 25, 2025 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனங்களுக்கு ஏற்ப 5 முதல், 25 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும்.
இது குறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தமுள்ள சுங்கச்சாவடிகளில் 32 காலாவதியாகி விட்டன. அவற்றை மூடக்கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆண்டுதோறும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது. ஆனால், போதிய சாலை பராமரிப்பு பணிகள் இல்லாததால், விபத்துகள் அதிகமாக நடக்கின்றன.
எனவே, காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட, மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும். ஏப்ரல் முதல் உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணங்களால், சரக்கு லாரிகளின் வாடகை கட்டணமும் கணிசமாக உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.