உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 22, 2026 07:07 PM

அ நிறம் | அளவு
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, விடுமுறை தினமான இன்று (நவ.,22), தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர்.
காவிரியாற்றில் நீர்வரத்து இன்று காலை, 8:00 மணிக்கு, 1,000 கன அடியாக இருந்தது. இதனால் ஆற்றில் பரிசல் சவாரி அனுமதிக்கப்பட்டது. பலர் ஆயில் மசாஜ் செய்தும், மெயின் பால்ஸ், சினி பால்ஸ் மற்றும் காவிரியாற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். பிறகு மீன் குழம்புடன் சமையல் செய்து சாப்பிட்டனர். கோத்திக்கல் வழியாக ஐந்தருவி, பெரியபாணி, மணல் திட்டு வழியாக இயக்கப்பட்ட பரிசல்களில், காவிரியாற்றின் அழகை கண்டு ரசித்தனர்.
