உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 28, 2026 10:38 PM

அ நிறம் | அளவு
ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காடுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன்படி இன்று (நவ.,28) ஏராளமானோர் குவிந்தனர்.
சூழல் சுற்றுலா, அண்ணா, ஏரி பூங்காக்கள், ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஜென்ஸ் சீட், பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களை, அவர்கள் பார்த்து ரசித்தனர்.
படகு இல்லத்தில், காலை முதலே பலர், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அங்கு ஏராளமானோர் குவிந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.
