ஊர்தோறும் கஞ்சா விற்பனை காங்., -- எம்.எல்.ஏ., பேட்டி வைரல்
ஊர்தோறும் கஞ்சா விற்பனை காங்., -- எம்.எல்.ஏ., பேட்டி வைரல்
ADDED : அக் 03, 2024 08:08 PM
விருத்தாசாலம்:''விருத்தாசலம் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது'' என, டி.எஸ்.பி.,யை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது.
கடலுார் மாவட்டம் விருத்தாசலத்தில், காந்தி ஜெயந்தியையொட்டி, காங்., சார்பில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபயணம் அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதை மீறி, ஊர்வலமாக வந்த ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட கட்சியினருக்கும், டி.எஸ்.பி., கிரியா சக்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அளித்த பேட்டியில், 'விருத்தாசலம் பகுதியில் ஊருக்கு ஊர் கஞ்சா விற்கப்படுகிறது. இது, தெரியுமா தெரியாதா. தடுக்க வேண்டியது யார், போலீஸ் தானே. கஞ்சாவுக்கு அனுமதி உண்டு; நடைபயணத்திற்கு அனுமதி இல்லையா' என டி.எஸ்.பி.,க்கு எதிராக கேள்வி எழுப்பினார்.
இந்த வீடியோவை அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, 'தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும் ஊருக்கு ஊர் கஞ்சா விற்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்' என, வைரலாக்கி வருகின்றனர்.
காங்., - எம்.எல்.ஏ.,வின் பேட்டி தி.மு.க.,வுக்கு குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.