தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆட்டோ கட்டணத்தை தொழிற்சங்கத்தினர் நிர்ணயிக்க முடியாது!

ஆட்டோ கட்டணத்தை தொழிற்சங்கத்தினர் நிர்ணயிக்க முடியாது!

ஆட்டோ கட்டணத்தை தொழிற்சங்கத்தினர் நிர்ணயிக்க முடியாது!


ADDED : ஜன 29, 2025 09:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 09:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'ஆட்டோ கட்டணத்தை, அரசு தான் நிர்ணயிக்கும்; தொழிற்சங்கத்தினர் நிர்ணயிக்க முடியாது. கூடுதல் கட்டணம் யாரேனும் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்' என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மினி பஸ் கட்டணத்தை சீரமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதை தொடர்ந்து ஆட்டோ சங்கங்கள் சில தன்னிச்சையாக ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோமீட்டருக்கு 50 ரூபாயும், கூடுதலாக ஒவ்வொரு கிலோமீட்டருக்கு 18 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்படும் என்றும், காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ஒரு ரூபாய் 50 பைசா பெறப்படும் எனவும், இந்த புதிய கட்டண உயர்வு பிப். 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் ஆட்டோ சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை வருமாறு:சில ஆட்டோ சங்கங்கள் பிப்.,1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக போக்குவரத்து துறை கவனத்துக்கு வந்துள்ளது.

ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பான முடிவுகள் பரிசீலனையில் உள்ளன.ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வட்டார போக்குவரத்து அலுவலகர்களுக்கு நாளை வழங்கப்படும்

இவ்வாறு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us