மதுரையில் ரயில் தடம் புரண்டு விபத்து; பயணிகள் அச்சம்
மதுரையில் ரயில் தடம் புரண்டு விபத்து; பயணிகள் அச்சம்
ADDED : அக் 31, 2024 09:57 AM

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பயணிகள் பீதியடைந்தனர்.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட, வேலை பார்க்கும் நகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதனால் பண்டிகை கால சிறப்பு ரயில்களும் நிரம்பி வழிந்து வருகின்றன.
இந்த நிலையில், மதுரை ரயில்நிலையம் அருகே சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற பயணிகள் ரயில் இன்று காலை திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் இன்ஜினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று தடம் புரண்டதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், தீபாவளியைக் கொண்டாட, சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் பீதியடைந்தனர்.
பின்னர், ரயில் விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.