ADDED : நவ 18, 2025 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும் போது, பயணப்படி 25 சதவீதம் வழங்க வேண்டும் என, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், ரயில் ஓட்டுநர்களுக்கு, இந்த பரிந்துரை அமல்படுத்தப்படவில்லை.
எனவே, ரயில் ஓட்டுநர்களுக்கும், பயணப்படியை 25 சதவீதம் உயர்த்த கோரி, எஸ்.ஆர்.எம்.யூ., எனப்படும், தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில், சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையக வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

