ADDED : பிப் 26, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில், ஆந்திரா மாநிலம், நெல்லுார் செல்ல, திருச்சியில் இருந்து 42 வேகன்களுடன் இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்ட சரக்கு ரயில் நேற்று முன்தினம் இரவு வந்தது.
அதில், 2,000 டன் நெல் மூட்டைகள் இருந்தன. ஐந்தாவது தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது. நெல் மூட்டைகளை சரக்கு ரயிலை இழுத்து செல்லக்கூடிய மற்றொரு இன்ஜின், திருச்சியில் இருந்து கும்பகோணத்துக்கு வந்தது.
சரக்கை இறக்குவதற்கு முன், மற்றொரு இன்ஜினை பொருத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, ஒரு இன்ஜின், தடம் புரண்டு ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த இன்ஜின் மீது மோதி நின்றது. ரயில்வே பாதுகாப்பு குழு விசாரிக்கிறது.

