ADDED : ஏப் 14, 2025 03:40 AM

விருதுநகர் : கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கீழ்காணும் ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஞாயிறுதோறும் இயக்கப்படும் திருநெல்வேலி --- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஜூன் 1 வரை, திங்கள்தோறும் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் -- திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜூன் 2 வரை நீட்டிக்கப்படுகிறது.
இரு ரயில்களும் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, பொள்ளாச்சி, போத்தனுார் வழியாகச் செல்லும்.
வெள்ளிதோறும் இயக்கப்படும் தாம்பரம் -- கொச்சுவேலி ஏ.சி., சிறப்பு ரயில் (06035) மே 30 வரை, ஞாயிறுதோறும் இயக்கப்படும் கொச்சுவேலி -- தாம்பரம் ஏ.சி., சிறப்பு ரயில் (06036) ஜூன் 1 வரை நீட்டிக்கப்படுகிறது.
இரு ரயில்களும் செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாகச் செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியது.

