UPDATED : மார் 16, 2025 02:35 AM
ADDED : மார் 16, 2025 12:32 AM

சென்னை:'முருகனின் அறுபடை வீடுகளுக்கு செல்லும் வகையில், 'வெற்றிவேல்
எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் ரயில் சேவை துவங்க வேண்டும்' என, மத்திய ரயில்வே
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தமான் கோரிக்கை
மனு அளித்தார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது:
பாரம்பரிய
கலாசாரம் மற்றும் பண்பாடு நிறைந்த மாநிலம் தமிழகம். ஆன்மிக சுற்றுலா
செல்லும் வகையில், பாரம்பரிய பெரிய கோயில்கள் உள்ளன. அறுபடை வீடுகளான
திருத்தணி, சுவாமிமலை, திருச்செந்துார், திருப்பரங்குன்றம், மதுரை, பழநி
முருகன் கோவில்கள் மிகவும் புகழ் பெற்றவை.
இந்த கோவில்களுக்கு
தினமும் லட்சகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் அறுபடை
வீடுகளுக்கும் சென்று வர வசதியாக, 'வெற்றிவேல் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில்
புதிய ரயில் சேவை துவங்க வேண்டும்.
தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு
இடங்களில் இருந்து வரும் ஆன்மிக பயணியருக்கு இந்த ரயில் சேவை மிகவும்
பயனுள்ளதாக இருக்கும். கோரிக்கை உடனடியாக பரிசீலிக்கப்படும் என, அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.