ADDED : மார் 07, 2026 01:52 AM
சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் வேட்பாளர்களின் கட்டண செய்திகளை கண்காணிக்க, மொபைல் போன் செயலிகளை கையாளுவது குறித்து, தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், அனைத்து சட்டசபை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தகவல் தொழிற்நுட்ப உதவி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதுகுறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் நேற்று நடந்த பயிற்சியில் அனைத்து சட்டசபை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து மாவட்ட தகவல் தொழில்நுட்ப உதவி பணியாளர்கள் பங்கேற்றனர்.
மொபைல் போன் செயலியை பயன்படுத்துவது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பு, கட்டண செய்திகளை கண்காணித்தல் உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

