நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, செகந்திராபாத் - ராமநாதபுரம், அரக்கோணம் -கடப்பா ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமநாதபுரம் இரவு 9:10 மணி வாரந்திர சிறப்பு ரயில் வரும் 24, 31ம் தேதிகளில் ரத்து
ராமநாதபுரம் - செகந்திராபாத் காலை 9:50 மணி வாரந்திர ரயில் வரும் 26, பிப்., 2ம் தேதிகளில் ரத்து
அரக்கோணம் - ஆந்திரா மாநிலம் கடப்பா காலை 7:10 மணி குறுகிய துார பயணியர் ரயில் வரும் 24, 25ம் தேதிகளில் ரத்து
கடப்பா - அரக்கோணம் மதியம் 2:30 மணி குறுகிய துார பயணியர் ரயில் வரும் 24, 25ம் தேதிகளில் ரத்து.