பனியால் ரயில்கள் தாமதம் பயணியருக்கு அறிவுறுத்தல்
பனியால் ரயில்கள் தாமதம் பயணியருக்கு அறிவுறுத்தல்
ADDED : ஜன 02, 2026 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
வடக்கு மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிப் மொழிவு ஏற்பட்டுள்ளது. பயணியர் பாதுகாப்பை கருத்தில் வைத்து, சில வழித்தடங்களில், ரயில்கள் வேகம் குறைத்து இயக்கப்படுகின்றன. இதனால், ரயில்கள் சேவையில் தாமதம் ஏற்படுகிறது. இணை ரயில்கள் வருவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
அடுத்த சில வாரங்களுக்கும் பனி காலம் என்பதால், சில ரயில்களில் தாமதம் ஏற்படலாம். எனவே, பயணியர் வீட்டில் இருந்து புறப்படும் முன், ரயில் நேரத்தை சரி பார்த்து கொள்வது, நல்ல பயண திட்டமிடலாக இருக்கும்.
ரயில் இயக்கத்தில், ஏதாவது மாற்றம் இருந்தால், அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளலாம். வீண் அலைச்சலை தவிர்க்க முடியும். மேலும் '139' என்ற ரயில்வே உதவி எண்ணை தொடர்பு கொண்டு, தகவலைப் பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

