ரயில்கள் தாமதம்: ஆவடி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருப்பு
ரயில்கள் தாமதம்: ஆவடி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருப்பு
UPDATED : அக் 16, 2024 01:28 AM
ADDED : அக் 16, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஆவடி ரயில் நிலையத்தில் ரயி்ல்கள் வர தாமதம் ஆனதால் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்களுக்காக காத்திருக்கின்றனர்.
வெளியூர் ரயில்கள் சென்னை சென்ட்ரலிருந்து புறப்படும் சில ரயில்கள் ஆவடி ரயி்ல் நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில்கள் 12 மணி புறப்படும் என கூறப்படுகிறது. இதனால் ரயில் புறப்பட தாமதமானதால், வெளியூர் செல்வதற்காக அங்கு பெண்கள், குழந்தைகள் போதிய வசதி இல்லாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
சென்னையில் வாடகை கார்கள், டாக்ஸிகள் இயக்கப்படாததால், விமான நிலையம் செல்பவர்களுக்கு அரசு பேருந்து ஏற்பாடு செய்துள்ளது.