sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேரெழுந்துார் சிவன் கோவில் கல்வெட்டுகள் படியெடுப்பு

/

தேரெழுந்துார் சிவன் கோவில் கல்வெட்டுகள் படியெடுப்பு

தேரெழுந்துார் சிவன் கோவில் கல்வெட்டுகள் படியெடுப்பு

தேரெழுந்துார் சிவன் கோவில் கல்வெட்டுகள் படியெடுப்பு

1


UPDATED : அக் 07, 2025 03:42 AM

ADDED : அக் 07, 2025 03:39 AM

Google News

1

UPDATED : அக் 07, 2025 03:42 AM ADDED : அக் 07, 2025 03:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பழமையான கல்வெட்டுகளை படியெடுக்கும் பணியில், மத்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தேரெழுந்துாரில், பழமையான வேதபுரீஸ்வரர் எனும் சிவன் கோவில் உள்ளது. இங்கு, நிறைய கல்வெட்டுகள் உள்ளன.

மத்திய தொல்லியல் துறையின் தென்மாநில கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம், கல்வெட்டாய்வாளர் நாகராஜன் உள்ளிட்ட குழுவினரிடம், படியெடுத்து ஆவணப்படுத்த உத்தரவிட்டார். தற்போது அப்பணி நடக்கிறது.

இது குறித்து, நாகராஜன் கூறியதாவது:


மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், தேரெழுந்துாரில் உள்ள, வேதபுரீஸ்வரர் கோவில் அர்த்தமண்டபத்தின் கதவு துாண் உள்ளிட்ட இடங்களில், 10 கல்வெட்டுகளை படியெடுத்துள்ளோம்.

அதில் ஒரு கல்வெட்டு, குலோத்துங்க சோழனின் 44வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 1114ல் பொறிக்கப்பட்டது. இதன்படி, இந்த ஊர், 'திருவழுந்துார்' என முற்காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது.

இந்த கோவிலுக்கு, நந்தா விளக்குகள் மற்றும் இரவு சந்தி விளக்கு என, ஐந்து விளக்குகளை, மாதம் ஒருவர் என, ஐந்து பேர் ஏற்ற வேண்டும் என்பதற்காக, கவினியன் வாமன் சிறிலங்கோவியன் என்பவர், கவினியன் வாமன் நாராயணன், செய்யிரிய சித்திரன், பரதாயன் கேரளன், நாராயணன், கரநாட்டான், திருவழுந்துாருடையான் தாநாட்டார் அணியளந்தார் நின்றான் எனும் ஆயிரத்தெழுநுாற்றுவ தாநாட்டான் ஆகிய சிவ பிராமணர்களுக்கு, பொற்காசுகளை தானமாக வழங்கிய தகவல் உள்ளது. மற்ற கல்வெட்டுகளை ஆராயும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us