முக்கிய துறைகளில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
முக்கிய துறைகளில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
UPDATED : ஜன 20, 2024 07:56 PM
ADDED : ஜன 20, 2024 07:50 PM

சென்னை: முக்கிய துறைகளில் பணியாற்றிய ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதன் விவரம்: வேளாண்துறை ஆணையாளராக இருந்த சுப்பிரமணியன் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக மாற்றம்.
நில நிர்வாகத்துறை ஆணையளராக இருந்த நாகராஜன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம்.
மீன்வளத்துறை ஆணையளராக இருந்த பழனிசாமி நில நிர்வாக ஆணையாளராக மாற்றம்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையளராக இருந்த ஜெயஸ்ரீ சமூல நலத்துறை செயலாளராக மாற்றம்.
சமூகநலத்துறை முதன்மை செயலராக இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு , மீன்வளத்துறை செயலராக மாற்றப்பட்டார்.
தமிழக வளர்ச்சித்துறை செயலராக இருந்த செல்வராஜ் சாலை திட்டம் 2 துறையின் செயலராக மாற்றம்.
இவ்வாறு முக்கிய துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.