ADDED : பிப் 09, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆறு பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஏழு பேர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சுகுமார் - ஈரோடு; இளங்கோ - வேலுார்; சதீஷ் - விழுப்புரம்; செந்தில்குமார் - கரூர்; கருப்பண ராஜவேல் -திருவள்ளூர்; லோகநாதன் - கிருஷ்ணகிரிக்கும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பிரபாகரன், விவேக், பாலாஜி, ராஜா செல்வன், பாரதி, ராஜபிரகாஷ், பேச்சிமுத்து ஆகியோர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக பதவி உயர்வுடன், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

