தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பெயர்ச்சியடைந்தார் ராகு பகவான் திருநாகேஸ்வரத்தில் பக்தர்கள் தரிசனம்

பெயர்ச்சியடைந்தார் ராகு பகவான் திருநாகேஸ்வரத்தில் பக்தர்கள் தரிசனம்

பெயர்ச்சியடைந்தார் ராகு பகவான் திருநாகேஸ்வரத்தில் பக்தர்கள் தரிசனம்


UPDATED : நவ 13, 2026 09:10 PM

ADDED : நவ 13, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 09:10 PM ADDED : நவ 13, 2026 09:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில், நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என, இரு துணைவியருடன் மங்கள ராகுவாக, தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

ராகு பகவானின் திருமேனியில் பாலபிஷேகம் செய்யும் போது, அந்த பாலானது நீல நிறமாக மாறும். ராகு பகவான், ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இந்த நிகழ்வு ‘ராகு பெயர்ச்சி’ எனப்படுகிறது.

இந்தாண்டு ராகுபெயர்ச்சியை, முன்னிட்டு நவ., 11ம் தேதி, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று காலை, 9:30 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும், பிற்பகல், 4:40 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது.

அதன்பின் ராகு பகவானுக்கு பால், மஞ்சள், திரவியப்பொடி, தயிர் உள்ளிட்ட மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று மாலை, 5:14 மணிக்கு கும்ப ராசியிலிருந்து, மகர ராசிக்கு ராகுபகவான் பெயர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, தங்க கவசத்துடன் அலங்கரிக்கப்பட்ட ராகு பகவானுக்கு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

* மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவகிரகங்களில் கேது பகவான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சாயா கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு – கேது பகவான்கள், ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னோக்கி, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று கேது பகவான் மாலை, 5:14 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று கேது பகவானை தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us