சொத்து பரிவர்த்தனையில் வெளிப்படைத்தன்மை ; நம்பகத்தன்மைக்கு LANDSNDEEDS
சொத்து பரிவர்த்தனையில் வெளிப்படைத்தன்மை ; நம்பகத்தன்மைக்கு LANDSNDEEDS
UPDATED : அக் 09, 2026 05:17 PM
ADDED : அக் 09, 2026 05:14 PM
சொத்துக்களின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நிலம், வீடு, கட்டடம், மனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கும்போது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். சொத்தின் உரிமைப் பத்திரங்களை மட்டும் சரிபார்ப்பது போதாது. உரிமை மாற்றங்களின் தொடர் ஆவணங்கள், மூலப் பத்திரம், வில்லங்கச் சான்று , சிட்டா, நில அளவை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட சொத்தின் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா, திட்டமிட்ட வளர்ச்சிப் பகுதிக்குள் அமைந்துள்ளதா, நிலத்தின் வகை என்ன, அரசின் நிலக் கையகப்படுத்தும் திட்டங்களில் இடம் பெற்றுள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைச் சரிபார்ப்பது முக்கியம். பதிவு, நில அளவை, வருவாய்த்துறை சார்ந்த பதிவுகளில் காணப்படும் குறைபாடுகளும், சொத்து பரிவர்த்தனையில் ஈடுபடுவோரின் செயல்பாடுகளும் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். இத்தகைய சூழலில், அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து, தேவையான தகவல்களைச் சரிபார்ப்பது தனிநபர்களுக்குச் சவாலாக அமைகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, சொத்து பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் LANDS NDEEDS நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேர்மை, அனுபவம், கல்வித்தகுதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர் மூலம், நிலம், வீடு, மனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தொடர்பான பரிவர்த்தனைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குகிறது.
சொத்து வாங்குவதற்கு முன் ஆவணங்களை ஆய்வு செய்வது முதல், பரிவர்த்தனை தொடர்பான விவரங்களைச் சரிபார்ப்பது வரை தேவையான வழிகாட்டுதல்களைப் பெற LANDSNDEEDS நிறுவனத்தை அணுகலாம். கோவை, சென்னை, பெங்களூருவில் சேவை மையங்கள் உள்ளது. முகவரி: LANDSNDEEDS, எண் 42, ரேஸ்கோர்ஸ், கோவை – 641018. தொடர்புக்கு: 0422 – 4359777, 79040 14351, 99449 92530, 70105 92827. இணையதளம்: landsndeeds.com. மின்னஞ்சல்: landsndeeds@gmail.com.
