ஜன.,9 முதல் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பு
ஜன.,9 முதல் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பு
ADDED : ஜன 03, 2024 06:41 PM

சென்னை: சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு தோல்வி அடைந்ததை அடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 9-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு செய்துள்ளன.
ஒய்வூதியம் மற்றும் ஊதிய உயர்வு , காலிபணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலத்துறை மற்றும் போக்குவரத்து துறை இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தின. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி.,ஹெச்.எம்.எஸ்., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றாகவும், அண்ணா தொழிற்சங்கம் தனியாக என இரு தரப்பாக வரும் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.
ஓய்வு பெற்றோரின் பஞ்சப்படி விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளமுடியாது. கோரிக்கைகள் தொடர்பாக மீண்டும் மீண்டும் நேரம் கேட்பது எங்களை ஏமாற்றுவதாக உள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக எதுவும் வழங்கவில்லை என சி.ஐ.டி.யூ.,சவுந்தரராஜன் தெரிவித்தார்.