sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஆன்லைன்' ஷாப்பிங்கில் வீடு தேடி வரும் 'டிரையல் ரூம்'

/

'ஆன்லைன்' ஷாப்பிங்கில் வீடு தேடி வரும் 'டிரையல் ரூம்'

'ஆன்லைன்' ஷாப்பிங்கில் வீடு தேடி வரும் 'டிரையல் ரூம்'

'ஆன்லைன்' ஷாப்பிங்கில் வீடு தேடி வரும் 'டிரையல் ரூம்'


ADDED : செப் 07, 2025 02:22 AM

Google News

ADDED : செப் 07, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாதாரணமாக கடைக்கு சென்று துணி வாங்கும் போது, பல ஆடைகளை அணிந்து பார்த்து அதில், சிறப்பான ஒன்றை வாங்குவது நம் வழக்கம். அந்த 'டிரையல் ரூம்' நம் வீட்டுக்ககே வந்தால் எப்படி இருக்கும்? இது தான் 'tryo' ஸ்டார்ட் அப் கம்பெனியின் கான்சப்ட்.

பெங்களூருவை தளமாக கொண்ட இந்த ஸ்டார்ட்அப், ஆடைகளை வாங்க, பணம் செலுத்துவதற்கு முன் வீட்டில் போட்டு பார்த்து பிடித்ததை எடுத்துக் கொண்டு மீதியை ரிட்டர்ன் செய்வது என்ற கான்சப்டை வழங்குவதன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வழக்கத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

இந்தியாவின் பேஷன் ஆன்லைன் வணிக சந்தை 2032ம் ஆண்டுக்குள், 8.50 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சரியான பிட்டிங், துணிகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்த கவலைகள் காரணமாக ஏறத்தாழ, 40 சதவீத வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய தயங்குகின்றனர். இந்த நம்பிக்கையின்மை பெரும்பாலும் வாங்குபவர்களை ஆப்லைன் கடைகளுக்குத் தள்ளுகிறது. இது டிஜிட்டல் பேஷன் அனுபவத்தில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்துகிறது. 'வீட்டிலேயே டிரையல் பார்த்து, அதன்பின், பணம் செலுத்தவும்,' என்ற வகையிலான பேஷன் சந்தையை இந்நிறுவனம் துவக்கி உள்ளது.

எப்படி செயல்படுகிறது இந்த கம்பெனியின் செயலியில் (app) சென்று உங்களுக்கு பிடித்த, 10 ஆடைகள் வரை பணம் ஏதும் கொடுக்காமலேயே ஆர்டர் செய்து, அவற்றை 60 நிமிடங்களிலேயோ அல்லது நீங்கள் விரும்பும் நேரத்திலோ பெற்று, 30 நிமிடத்தில் டிரையல் பார்த்து முடித்து, பிடித்தமானவைகளை எடுத்து கொண்டு அதற்கான பணத்தையும் செலுத்தி விட்டு மீதமுள்ள ஆடைகளை திருப்பி கொடுத்து விடலாம். முதல் ஆர்டருக்கு தற்சமயம், 50 சதவீதம் தள்ளுபடியும் அளிக்கின்றனர். இந்த சேவை தற்போது பெங்களூரில் மட்டும் இருக்கிறது. மற்ற ஊர்களுக்கும் சிறிது சிறிதாக விரிவுபடுத்தப்படும்.

'ட்ரையோ' ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஆரம்பக்கட்ட சோதனை ஆர்டர்களை வலுவான வாடிக்கையாளர் திருப்தி மற்றும் சராசரியை விடக் குறைந்த ரிட்டர்ன்களுடன் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தற்போது Bewakoof, Berger, Cove and Lane, Hues Fab,Indo Cotton, InstaFab, Journey East, Kisah, One Mile, Soul Innate, The Bear House, The Souled Store, Truetee, Blue Jam, Virgio, Nishorama உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பிரீமியம் பிராண்டுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடைகளை வழங்குகிறது.

பேஷன் வர்த்தக ஸ்டார்ட்அப் கம்பெனியான ட்ரையோ, ஜீரோபேர்ல் வென்ட்சர் கேபிடல் வாயிலாக, 3 கோடி ரூபாய் பண்டிங்கும் சமீபத்தில் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பண்டிங் கம்பெனியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும், தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை வலுப்படுத்தவும், இந்திய பேஷன் பிராண்டுகளுடன் கூட்டாண்மைகளை ஆழப்படுத்தவும் பயன்படுத்தப்படும். இணையதளம் www.tryo.club.

சந்தேகங்களுக்கு

இ-மெயில் :sethuraman.sathappan@gmail.com அலைபேசி 98204 51259 இணையதளம் www.startupandbusinessnews.com

- சேதுராமன் சாத்தப்பன் -






      Dinamalar
      Follow us