23 வயதில் சிவில் நீதிபதி தேர்வில் சாதித்த பழங்குடி பெண்: குவியும் பாராட்டு
23 வயதில் சிவில் நீதிபதி தேர்வில் சாதித்த பழங்குடி பெண்: குவியும் பாராட்டு
ADDED : பிப் 13, 2024 03:13 PM

சென்னை: 23 வயதுடைய பழங்குடி பெண் ஸ்ரீபதி, சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்காக ஸ்ரீபதியை பலரும் பாராட்டி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உச்சியில் இருக்கிறது புலியூர் குக்கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீபதி என்ற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 'சிவில் நீதிபதி' தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதி ஆகியிருக்கிறார். 23 வயதே ஆன ஸ்ரீபதிக்கு பி.ஏ., பி.எல் சட்டப்படிப்புப் படித்துக்கொண்டிருக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. திருமணத்துக்குப் பிறகும் படிப்பைத் தொடர அவரது கணவர் உதவியாக இருந்திருக்கிறார்.
இந்த நிலையில், கர்ப்பமடைந்த ஸ்ரீபதி நீதிபதி தேர்வுக்கும் தயாரானார். பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்திருக்கிறது. ஆனால், நல்வாய்ப்பாகத் தேர்வு தேதிக்கு இரண்டு நாள்கள் முன்பே குழந்தை பிரசவித்திருக்கிறார் ஸ்ரீபதி. ஆனாலும் முயற்சியை கைவிடாத ஸ்ரீபதி, அந்த நிலையிலும் சென்னைக்கு வந்து தேர்வு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். தற்போது சிவில் நீதிபதி தேர்வில் வெற்றிப்பெற்று சாதித்துள்ளார்.
அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்! சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழகத்தில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழகம் தரும் பதில்!. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.