sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்சி விமானநிலையத்தில் சீமான், தமிழிசை, திருமாவளவன், திருச்சி சிவா திடீர் சந்திப்பு!

/

திருச்சி விமானநிலையத்தில் சீமான், தமிழிசை, திருமாவளவன், திருச்சி சிவா திடீர் சந்திப்பு!

திருச்சி விமானநிலையத்தில் சீமான், தமிழிசை, திருமாவளவன், திருச்சி சிவா திடீர் சந்திப்பு!

திருச்சி விமானநிலையத்தில் சீமான், தமிழிசை, திருமாவளவன், திருச்சி சிவா திடீர் சந்திப்பு!

15


ADDED : பிப் 18, 2026 07:08 PM

Google News

15

ADDED : பிப் 18, 2026 07:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் சீமான், தமிழிசை சவுந்தரராஜன், திருமாவளவன், திருச்சி சிவா ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழக அரசியல் களம் என்பது மிகவும் வித்தியாசமானது. எதிரும், புதிருமாக கச்சை கட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள், தங்கள் கள அரசியலை ஓரமாக வைத்துவிட்டு அவ்வப்போது நட்பு முறையில் சந்தித்துக் கொள்வது உண்டு. வட இந்திய அரசியலில் இது மிகவும் இயல்பான ஒன்று. தமிழகத்திலும் கடந்த காலங்களில் இப்படியான உதாரணங்கள் உண்டு.

அதில் லேட்டஸ்ட்டாக இன்று ஒரு சந்திப்பு திருச்சி விமான நிலையத்தில் நிகழ்ந்து இருக்கிறது. நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக எம்பி திருச்சி சிவா ஆகியோர் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பை அவர்கள் புகைப்படமாக பதிவு செய்து உள்ளனர். அதிலும் இந்த சந்திப்புக்கான போட்டோவை செல்பியாக திருச்சி சிவா எடுத்துள்ளார்.

சந்திப்பை திருமாவளவன் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் போட்டோவுடன் வெளியிட்டு இருக்கிறார். படத்துடன் முறுவலிக்கும் முரண்கள் என்று ஒரு சிறு தலைப்பிட்டு இந்த நிகழ்வையும் வர்ணித்துள்ளார். யதார்த்த சூழலில். இந்த 4 பேரின் அரசியல் பாதைகளும் வேறு, வேறு என்ற போதிலும் தற்போதுள்ள அரசியல் களத்தில் இந்த சந்திப்பு ஆச்சரியத்தையே தருகிறது.

பரஸ்பரம் மரியாதை நிமித்தமான மற்றும் அரசியல் கொள்கை கலப்பற்ற அப்பட்டமான அன்பின் சந்திப்பு என்றாலும் இணையவாசிகளால் இந்த படமும், சந்திப்பும் அதிக கவனம் பெற்றுள்ளது என்னவோ உண்மை.






      Dinamalar
      Follow us