மனைவியை விட்டு பிரிகிறேனா: நாம் தமிழர் கட்சிக்கு திருச்சி டி.ஐ.ஜி., பதிலடி
மனைவியை விட்டு பிரிகிறேனா: நாம் தமிழர் கட்சிக்கு திருச்சி டி.ஐ.ஜி., பதிலடி
ADDED : பிப் 16, 2025 01:22 PM

சென்னை: திருச்சி டி.ஐ.ஜி., வருண் குமார் தன்னுடைய மனைவி வந்திதா பாண்டேவை விவாகரத்து செய்ததாக தகவல் பரவியது. இதற்கு ''மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி' என வருண் குமார் பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
ஐ.பி.எஸ்., தம்பதியினரான வருண் குமார் - வந்திதா விவாகரத்து செய்வதாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வந்தது. பின்னர் இந்த தகவல் வதந்தி என்பது தெரியவந்தது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், திருச்சி டி.ஐ.ஜி., வருண் குமார் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: திரளநிதி திருடன் எந்த அளவிற்கு சென்று விட்டான் பாருங்கள் மக்களே, பார்க்கவே பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.
'மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி'. ஒரு பாடல் வரி 'நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே. இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வருண்குமார் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அடிக்கடி இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

