காலியாக இருக்குது திருச்சி சிறை : எம்.எல்.ஏ., பேச்சால் முதல்வர் சிரிப்பு
காலியாக இருக்குது திருச்சி சிறை : எம்.எல்.ஏ., பேச்சால் முதல்வர் சிரிப்பு
ADDED : ஆக 25, 2011 11:03 PM

சென்னை : ''மதுரை, பாளையங்கோட்டை சிறைகளெல்லாம் நிரம்பி வருகிறது.
ஆனால், திருச்சி சிறை மட்டும் காலியாக உள்ளது,'' என, மணப்பாறை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பேசியதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, பலமாக சிரித்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரசேகர் பேசும்போது, 'நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு, மதுரை, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், திருச்சி சிறை மட்டும் காலியாக உள்ளது' என்றார்.
இதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, சிரித்துக் கொண்டே எழுந்து, 'உறுப்பினர் மகிழ்வடையும் தகவல் ஒன்றை இப்போது கூறுகிறேன். இன்று (நேற்று) காலை, நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, குடமுருட்டி சேகர், ஷெரீப் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று கூறினார்.