திருச்சி, சேலம் மெட்ரோ ரயில்: விரைவில் சாத்தியக்கூறு அறிக்கை
திருச்சி, சேலம் மெட்ரோ ரயில்: விரைவில் சாத்தியக்கூறு அறிக்கை
ADDED : ஆக 15, 2023 05:30 AM

சென்னை : 'திருச்சி, சேலம் மெட்ரோ ரயில் திட்ட சாத்தியக் கூறு அறிக்கை இந்த மாதம் இறுதியில், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மதுரை, கோவை மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கையை அளித்துள்ளோம். இந்த அறிக்கை மீது, தமிழக அரசு ஆய்வு நடத்தி வருகிறது. திருச்சி, சேலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிப்பு பணி முடியும் நிலையில் உள்ளது.
இந்த மாதம் இறுதிக்குள் இந்த அறிக்கையை தமிழக அரசிடம் அளிக்க உள்ளோம். இந்த இரு நகரங்களிலும் தலா இரண்டு வழித்தடங்கள் அமைகின்றன. சேலத்தில், 40 கி.மீ., திருச்சியில், 38 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை விபரங்கள், மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ள இடங்கள்.
பஸ், ரயில் நிலையங்கள் இணைப்பு பகுதிகள், பயணியர் அதிகமாக இருக்கும் இடங்களில் மெட்ரோ ரயில் நிலைய வகைகள், செலவுகள், செயல்படுத்தப்படும் முறை, சமூக மற்றும் பொருளாதார விபரங்கள் உள்ளிட்டவை குறித்த விபரங்கள் அதில் இடம் பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.