ADDED : அக் 13, 2025 06:36 AM

திருப்பரங்குன்றம் மலை வழக்கில் கிடைத்த வெற்றி, முருகனுக்கு கிடைத்த வெற்றி. தீர்ப்புக்காக நீதிபதியை விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. இதில், மேல்முறையீடு சென்றாலும் வரலாற்று ரீதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
விஜய், தன் சுயநலத்திற்காக கரூரில் ரசிகர்களை காக்க வைத்தது வெட்கக்கேடு. தன்னால் ஏராளமான ரசிகர்களின் உயிர் பறிபோய் விட்டதே என்ற குற்ற உணர்வு அவருக்கு இருக்க வேண்டும். இதில், 42 பேரின் உயிரை காக்கத் தவறிய தி.மு.க., அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சி.பி.ஐ., விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
கமலையும், மக்கள் நீதி மய்யம் கட்சியையும், தன் கட்டுப்பாட்டுக்குள், தி.மு.க., எப்படி கொண்டு வந்ததோ, அதேபோல் கரூர் சம்பவத்தை வைத்து விஜயையும், த.வெ.க.,வையும் தன் கட்டுப்பாட்டில் தி.மு.க., கொண்டு வந்து விடும். எனவே, வருங்கால கமல் தான், த.வெ.க., தலைவர் ஜோசப் விஜய்.
-அர்ஜுன் சம்பத்
தலைவர், ஹிந்து மக்கள் கட்சி