தீ விபத்தின் பாதிப்பை அறிய தீயணைப்பு துறையில் 'ட்ரோன்'
தீ விபத்தின் பாதிப்பை அறிய தீயணைப்பு துறையில் 'ட்ரோன்'
ADDED : பிப் 16, 2025 12:35 AM

தமிழகத்தில் தீ விபத்தின் போது, அதன் பாதிப்பை உடனடியாக, 'ட்ரோன்கள்' வாயிலாக கண்டறிந்து தீயை அணைக்க, தீயணைப்பு துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒரு ட்ரோன் வாங்கப்பட உள்ளது.
தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைப்பதோடு, மீட்பு பணிகளிலும் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் தீயணைப்பு, மீட்பு பணிக்கான கருவிகளே இத்துறைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அதிக வெடிவிபத்து நடக்கும் சிவகாசி பகுதிகளில், பட்டாசு ஆலை கட்டடங்கள் வெடித்து சிதறும் போது, பாதுகாப்பு கருதி வீரர்கள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட முடிவதில்லை.
இதை தவிர்க்க, தீ விபத்து அல்லது கட்டட இடிபாடுகளின் போது ட்ரோன்களை பயன்படுத்தி, பாதிப்பின் அளவை கண்டறிந்து, அதற்கு தகுந்தாற் போல் துரிதமாக செயல்பட முடியும். முதலில் வாங்கப்படும், ட்ரோனை சிவகாசி பகுதியில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அனைத்து ஸ்டேஷன்களுக்கும் வழங்கப்படும்
- நமது நிருபர் -.

