sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிறிஸ்தவராக இருந்தும் ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டது அம்பலம் ; பத்திரிகையால் மோசடி புகாரில் சிக்கினார் செல்வப்பெருந்தகை!

/

கிறிஸ்தவராக இருந்தும் ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டது அம்பலம் ; பத்திரிகையால் மோசடி புகாரில் சிக்கினார் செல்வப்பெருந்தகை!

கிறிஸ்தவராக இருந்தும் ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டது அம்பலம் ; பத்திரிகையால் மோசடி புகாரில் சிக்கினார் செல்வப்பெருந்தகை!

கிறிஸ்தவராக இருந்தும் ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டது அம்பலம் ; பத்திரிகையால் மோசடி புகாரில் சிக்கினார் செல்வப்பெருந்தகை!

110


UPDATED : பிப் 22, 2026 08:56 PM

ADDED : பிப் 21, 2026 07:03 PM

Google News

UPDATED : பிப் 22, 2026 08:56 PM ADDED : பிப் 21, 2026 07:03 PM

110


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ., செல்வப்பெருந்தகை, தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று பாஜ தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

இணைக்கப்பட்டுள்ள திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழானது காங்கிரஸ் கட்சி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழ். மணம் முடிக்க காத்திருக்கும் மணமக்களுக்கு நம் வாழ்த்துகளும், ஆசிகளும்.

இந்த அழைப்பிதழ் செல்வப்பெருந்தகையால் பதிவு செய்யப்பட்டது. இந்த அழைப்பிதழின் வாசகங்கள் செல்வப்பெருந்தகை கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதை உறுதிபட தெரிவிக்கின்றது.

செல்வப்பெருந்தகை கிருஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ, ஹிந்துவாகவோ இருப்பதில் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை, ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியானது, பட்டியலின சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி (Reserved Constituency) ஆகும். அந்த தொகுதியில் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும்.

தாங்கள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுபவர் என்பதை மறைத்து, ரிசர்வ் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரை தகுதி நீக்கம் செய்யும் வகையில் பல்வேறு தீர்ப்புகள் ஏற்கனவே நீதிமன்றங்களால் வழங்கப்பட்டுள்ளன.

செல்வப்பெருந்தகை , உண்மையை மறைத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, மோசடி

செய்து தேர்தலில் போட்டியிட்டிருப்பது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; வெட்கக்கேடான செயல். பட்டியலின மக்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்துள்ள மிகப்பெரிய துரோகமாகும்.

தெரிந்தே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள செல்வப்பெருந்தகை பதவி விலக வேண்டும், காங்கிரஸ் கட்சி பட்டியிலின மக்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, செல்வப்பெருந்தகையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வப்பெருந்தகை வெற்றி செல்லாது என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதோடு, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக செல்வப்பெருந்தகையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு நாராயணன் திருப்பதி அறிக்கையில் கூறியுள்ளார்.


சட்டம் சொல்வது என்ன?


சட்டத்தின்படியும், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் முந்தைய உத்தரவுகளின்படியும், மதம் மாறிய ஒருவர், தாழ்த்தப்பட்டவருக்கான சலுகையை பெற முடியாது. அதாவது, ஹிந்துவாக இருந்து இஸ்லாமியர் அல்லது கிறிஸ்தவராக மதம் மாறியவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்கான சலுகையை தொடர்ந்து பெற தகுதியற்றவர். எனவே செல்வப் பெருந்தகை தெரிந்தே இந்த மோசடியை செய்துள்ளார் என்பது, அவர் வெளியிட்டுள்ள அழைப்பிதழ் மூலம் தெளிவாகிறது என்பது பாஜ குற்றச்சாட்டு.




தாழ்த்தப்பட்டவரே கிடையாது!


2021 பிப்.,12ல் ராஜ்யசபாவில் உறுப்பினர் ஒருவர் கேள்விக்கு பதிலளித்த சட்ட அமைச்சர், 'இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய ஒருவர், தாழ்த்தப்பட்டவருக்கான சலுகையை பெற முடியாது. தாழ்த்தப்பட்டவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியிலும் போட்டியிட முடியாது. 'இந்தியாவில், ஹிந்து, சீக்கியர், பவுத்தர் அல்லாத மதத்தை சேர்ந்த ஒருவர், தாழ்த்தப்பட்டவருக்கான சலுகையை பெற முடியாது' என்று தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us