தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அண்ணாதுரையை கைவிட்ட த.வெ.க.,

 அண்ணாதுரையை கைவிட்ட த.வெ.க.,

 அண்ணாதுரையை கைவிட்ட த.வெ.க.,


ADDED : பிப் 05, 2026 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 03:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை, கட்சி கொள்கை தலைவராக சமீபத்தில் அறிவித்த த.வெ.க., தலைவர் விஜய், அவரை கழற்றிவிடும் முடிவுக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

த.வெ.க., மாவட்ட செயலர்கள் சிலர் கூறியதாவது:

த.வெ.க., துவங்கும்போது, ஈ.வெ.ரா., காமராஜர், அம்பேத்கர், அஞ்சலை, வேலுநாச்சியார் ஆகியோரை கொள்கை தலைவர்களாக விஜய் அறிவித்தார்.

அதன்பின், மதுரை த.வெ.க., மாநாட்டில், அண்ணாதுரையையும் எம்.ஜி.ஆரையும், கொள்கை தலைவர்களாக சேர்த்து, மாநாட்டில் அவர்களின் படங்களை வைத்தார். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., குறித்து மட்டும் தொடர்ந்து பேசினார்.

த.வெ.க., மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில், 'அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., இருந்த இடத்தில், இப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனரே' என, விஜய் ஆதங்கப் பட்டார்.

எனவே, அண்ணாதுரை நினைவு நாளான நேற்று முன்தினம், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, ஒருங்கிணைந்த மாவட்டச் செயலர்கள் தயாரானோம். ஆனால், கட்சித் தலைமையிடம் இருந்து, அதுகுறித்து எந்த தகவலும் இல்லை.

இதுபற்றி தலைமையிடம் கேட்டபோது, 'அண்ணாதுரை குறித்து பேசி கட்சிக்கு எந்த பயனும் இல்லை. அவரை போற்றி பேசுவதால், திராவிட கட்சிகள்தான் பயன் அடைகின்றன.

'எனவே, கொள்கை தலைவர்கள் பட்டியலில் இருந்து அண்ணாதுரையை கழற்றிவிடும் முடிவுக்கு விஜய் வந்துவிட்டார். இனி விஜய்தான் நமக்கு எல்லாமே. அவரின், புகழை மட்டுமே பரப்புங்கள்; அவரின் பிறந்த நாளை மட்டும் கொண்டாடுங்கள்' என தெரிவித்தனர்.

அதனால்தான், அண்ணாதுரையின் படத்தை, அவருடைய நினைவு நாளில் விஜய் பகிரவில்லை. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளும், அண்ணாதுரை குறித்து பேசாததற்கு இதுதான் காரணம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us