பிரசாரத்துக்கு பாரபட்சமின்றி அனுமதி கோரி த.வெ.க., வழக்கு
பிரசாரத்துக்கு பாரபட்சமின்றி அனுமதி கோரி த.வெ.க., வழக்கு
ADDED : செப் 18, 2025 01:18 AM
சென்னை:தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மாநிலம் முழுதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டு, கடந்த 13ம் தேதி, திருச்சியில் பிரசாரத்தை துவக்கினார்.
செப்., 20ம் தேதி முதல் டிச., 20ம் தேதி வரை, ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், மாநிலம் முழுதும் பிரசாரம் செய்ய உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதை குறிப்பிட்டு, விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை, எந்த பாரபட்சமும் இல்லாமல் பரிசீலித்து அனுமதி வழங்க, காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிடக் கோரி, த.வெ.க., தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை, அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு எடுக்கக் கோரி, நீதிபதி சதீஷ்குமார் முன், த.வெ.க., தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.