கார் மீது லாரி மோதியதில் காரில் தீ: ஐந்து பேர் காயம்
கார் மீது லாரி மோதியதில் காரில் தீ: ஐந்து பேர் காயம்
ADDED : பிப் 22, 2024 07:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை தல்லாகுளம் சுந்தர்ராஜன் தனது குடும்பத்தினர் 5 பேருடன் சென்னை நோக்கி சென்றார்.
இன்று மாலை கொட்டாம்பட்டி வலைச்சேரி பட்டி விலக்கு அருகே சென்றபோது பின்னால் வைக்கோல் ஏற்றி வந்த லாரி மோதியதில் கார் பள்ளத்தில் இறங்கியதில் தீப்பிடித்தது. ஐந்து பேரும் காரை விட்டு கீழே காயங்களுடன் இறங்கினர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது .கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.