பார்லி.யில் ஆதரவு; இங்கே எதிர்ப்பு: இ.பி.எஸ்., நடிப்பதாக முதல்வர் குற்றச்சாட்டு
பார்லி.யில் ஆதரவு; இங்கே எதிர்ப்பு: இ.பி.எஸ்., நடிப்பதாக முதல்வர் குற்றச்சாட்டு
UPDATED : டிச 09, 2024 04:33 PM
ADDED : டிச 09, 2024 04:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: டங்ஸ்டன் விவகாரத்தில் பார்லி.யில் ஆதரித்துவிட்டு சட்டசபையில் இ.பி.எஸ்., நடிப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் தள பதிவு விவரம்:
சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி, அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.
சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.