மீண்டும் 'டங்ஸ்டன்' சுரங்க திட்ட ஆய்வு? அதிர்ச்சியில் மேலுார் மக்கள்!
மீண்டும் 'டங்ஸ்டன்' சுரங்க திட்ட ஆய்வு? அதிர்ச்சியில் மேலுார் மக்கள்!
ADDED : செப் 19, 2026 11:52 PM
கொட்டாம்பட்டி-: மதுரை மாவட்டம், மேலுாரில் 'டங்ஸ்டன்' சுரங்க திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கொட்டாம்பட்டி அருகே, அ ய்யாபட்டி ஊராட்சி மலம்பட்டியில் உள்ள கரும்பாறைகளில் புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் இரு நாட்களாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இயற்கை வள பாதுகாப்பு மக்கள் கூட்டமைப் பு நிர்வாகி செல்வராஜ் கூறுகையில், ''கரும்பாறைகளில் ஆய்வு நடத்தப்படுவதால், மீண்டும் டங்ஸ்டன் குறித்து ஆய்வு நடப்பதாக அச்சப்படுகிறோம்.
''ஏற்கனவே மத்தி ய சுரங்கத்துறை பதிவில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் டங்ஸ்டன் கனிமம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து, மக்களுக்கு உரிய விளக்கம் அளித்து, அச்சத்தை போக்க வேண்டும்,'' என்றார்.
தாசில்தார் வசந்த் கூறுகையில், ''ஆய்வு விபரம் ஏதும் தெரிவிக்கவில்லை. உடனடியாக விசாரிக்கப்படும்,'' என்றார்.
